வனத் துறையில் ஒரு பாடலாசிரியர்: இயற்கை சார்ந்த பாடல்களை எழுதும் வல்லவர்..!

கோவை: இயற்கை என்றாலே பசுமை, அழகு, அமைதி போன்ற பல எண்ணங்கள் நம் மனதில் எழுவதுண்டு. அத்தகைய இயற்கையை அளவு கடந்து நேசிக்கும் ஒருவர் அது சார்ந்த இடத்திலேயே பணியாற்றும் போது, அலாதி இன்பம் தானே..?

கோவை: இயற்கை என்றாலே பசுமை, அழகு, அமைதி போன்ற பல எண்ணங்கள் நம் மனதில் எழுவதுண்டு. அத்தகைய இயற்கையை அளவு கடந்து நேசிக்கும் ஒருவர் அது சார்ந்த இடத்திலேயே பணியாற்றும் போது, அலாதி இன்பம் தானே..?

வால்பாறை வனச் சரகத்தில் வனவராக பணியாற்றும் ஒரு மனிதர் இயற்கை மீதும், எழுத்தின் மீதும் கொண்ட காதலால் அதனை வெளிப்படுத்தும் விதமாக இயற்கை சார்ந்த பாடல்களை எழுதி வருகிறார். அதில் தற்போது மூன்று பாடல்களும் வெளியாகியுள்ளன.

பாடலாசிரியர்

வால்பாறையில் தற்போது வனவராக பணியாற்றி வருபவர் ராஜன். சுமார் இருபது ஆண்டுகாலமாக தமிழ்நாடு வனத் துறையில் பணிபுரிந்து வருகிறார். பொதுவாகவே வனத் துறையில் பணியாற்றும் நல்லுள்ளங்கள் இயற்கையையும், ஐந்தறிவு ஜீவன்களை பாதுகாப்பதிலும் சற்றே மெனக்கெடுவதுண்டு. அவ்வாறு, வனம் மற்றும் அது சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து பாடல்களை இயற்றி வருகிறார் ராஜன்.



பள்ளிப் பருவத்திலேயே பாடல்கள் எழுதும் ஆர்வம் தனக்குள் உதித்து விட்டதாக கூறும் இவர், எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி இயற்கை மீதான தன் காதலை பாடல் வரிகள் மூலம் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.

'வாழ்க்கை, வனம், பாடல் இது பற்றி கொஞ்சம் கூறுங்களேன்' என்று அவரிடம் கேள்விகளை எழுப்பினோம். மெல்லிசையாய் தொடர்ந்தார், "பணிக்குச் சேர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் எங்களை வைகை அணைக்கு பயிற்சிக்காக அழைத்துச் சென்றனர். அப்போது பொழுது போக்கிற்காக நன் சிறுவயதில் எழுதிய பாடல் ஒன்றினை சக ஊழியர்களிடம் பாடிக் காட்டினேன். என்னைப் பாராட்டிய அவர்கள், வைகை அணையை பற்றி ஒரு பாடல் எழுதச் சொல்ல, அதனையும் எழுதி பாடிக்காட்டினேன். அங்கிருந்த அனைவரும் என்னை ஊக்குவித்ததோடு, தொடர்ந்து பாடல்களை எழுதுமாறு உற்சாகப்படுத்தினர்.

'பச்சை மலையே..!'

அக்காமலையில் பணியாற்றிய போது அந்த இடத்தில் உள்ள பசுமையான புல்வெளிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த புல்வெளிகள் குறித்து 'பச்சை மலையே' என்ற பாடலை எழுதினேன். அந்த பாடலை எழுதி முடித்த பின்னர் ஒரு மெட்டுப் போட்டு முழுமையான பாடலாக வெளியிட விரும்பினேன். அப்போது கோவையை சேர்ந்த ரவி.கே.மேனன் என்பவர் என் பாடல் வரிகளுக்கு ஏற்ற ஒரு இசையை அமைத்துக் கொடுத்து உதவினார். பிரதீப் குமார் என்பவர் பச்சை மலையே பாடலை பாடினார். அந்த பாடல் வெளியாகி எனக்கு பாராட்டுக்கள் கிடக்க மீண்டும் பாடல் எழுதத் தோன்றியது.

தற்போது பணியாற்றி வரும் அட்டகட்டி என்ற பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் குறித்து இரண்டு பாடல்கள் எழுதினேன். இந்த இரண்டு பாடல்களுக்கும் ரவி.கே.மேனன் இசையமைத்துக் கொடுத்து உதவினார்.  இந்த பாடலை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் கடந்த மாதம் வெளியிட்டார்.



இன்னும்..;

யானை-மனித மோதல்கள், விலங்குகள், வரையாடு மற்றும் காடு போன்ற தலைப்புகளில் இதுவரை 14-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி முடித்துவிட்டேன். நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது அந்த பாடல் வரிகளுக்கு மெட்டுக்களால் மெருகேற்றி வெளியிடக் காத்திருக்கிறேன்.

என்று அவரது பாடல்களைப் போலவே இனிமையாய் கூறி முடித்தார் ராஜன்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...