ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைக்கால கணக்கெடுப்புப் பணி இன்று தொடக்கம்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு இருமுறை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் இப்பணி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், கோடைக்கால வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை என 8 நாட்கள் நடக்கும் இப்பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். முதல்நாளான இன்று புலி, சிறுத்தை, கரடி மற்றும் செந்நாயின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிற நாட்களில் புலிகள் வேட்டையாடும் உயிரினங்களின் அடிப்படையில் வன உயிரின கணக்கெடுப்பு நடக்கிறது. 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...