வாகன விபத்தில் மகன் பலி: சோகம் தாளாமல் பெற்றோர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மகன் உயிரிழந்த சோகம் தாளாமல் பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மகன் உயிரிழந்த சோகம் தாளாமல் பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (54) இவரது ஒரே மகன் நிசாந்த். திண்டல் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பாஸ்போர்ட் பதிவு செய்வதற்காக தனது உறவினர் கிருபாகரன் என்பவருடன் கோவை சென்றுவிட்டு மீண்டும் நாமக்கல் நோக்கி நேற்று மாலை பைக்-கில் சென்று கொண்டிருந்தனர்.



அவர்களது பைக் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோவையிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ-வில் இருந்த பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இந்நிலையில், அதிவேகமாக வந்த நிசாந்த்-ன் பைக் எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நிசாந்த் மற்றும் கிருபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த நிசாந்த்-ன் பிரேதத்தை அவினாசி அரசு மருத்துவமனையில் அடையாளம் காட்டவந்த தந்தை சக்திவேல் (54) மற்றும் தாய் சுதா (45) ஆகியோர் துக்கம் தாளாமல், குளிர்பானத்திற்குள் விசம் கலந்து குடித்தனர். தகவல் அறிந்து அவர்கள் இருவரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிள்ளைகள் மீது அளவற்ற பாசத்தை வைக்கும் பெற்றோருக்காக, நிதானத்துடன் செயல்பட்டிருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...