துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார்..?: நடிகர் கமல்

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும் என  மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். அவர்களிடம் ஆறுதல் கூறிய பேசிய கமல், அவர்களின் துயரங்களை கேட்டறிந்த போது கண்கலங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கமல் பேசுகையில், "போன உயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது. யாரையோ திருப்திபடுத்தவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவலர்களை ஏவியது யார் என்ற உண்மை தெரிய வேண்டும்," என வலியுறுத்தினார்.

மேலும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிப்பது முக்கியம் இல்லை அது குறித்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நடத்தும் போது, அங்கு அனுபவம் உள்ள மருத்துவர்கள் அருகில் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...