தூத்துக்குடி கலவரம்: நீலகிரி பயணத்தை நிறைவு செய்து சென்னை புறப்பட்டார் ஆளுநர்

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21-ம் தேதி மாலை உதகைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து வரும் ஜுன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க ஆளுநர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் தனது குடும்பத்தாருடன் உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...