யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு சலுகை

கோவை: முன்பதிவில்லாத சீசன் மற்றும் பிளாட் பாரம் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலியின் மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீத போனஸை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: முன்பதிவில்லாத சீசன் மற்றும் பிளாட் பாரம் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலியின் மூலம் வாங்குபவர்களுக்கு 5 சதவீத போனஸை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆபரேஷன் ஐந்து நிமிடங்கள்' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ரயில்வேயில் சீசன், முன்பதிவில்லாத மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை பெற யூடிஎஸ் என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம், ரயில் நிலையங்களில் 25 மீட்டர் சுற்றளவில், 5 நிமிடங்களில் பயணிகள் தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம் செய்யலாம். இதற்காக, 'யூடிஎஸ்' மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், 'ஜிபிஎஸ்' முறை மூலம் ரயில்வேயில் பணம் செலுத்தும் சிறப்பு ஆப் 'ஆர்-வேலட்' பயன்படுத்தினால், கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த இ-வேலட்டை எந்த ரயில் நிலையத்திலுள்ள புக்கிங் சென்டரிலும் அல்லது ஐ.ஆர்.சி.டி.சி., இணையத்தில் டாப் அப் செய்யலாம். இத்திட்டத்தில் அச்சிடப்பட்ட டிக்கெட் ஏதும் தேவையில்லை. பயணிகள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்படும் டிக்கெட், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட எந்த முறையிலும், வேறு மொபைல் போனுக்கு மாற்ற முடியாது. பயணிகள் அச்சிடப்பட்ட டிக்கெட் இல்லாமல், விரைவாகப் பயணிக்க பெரிதும் பயன்படும்.

இந்த நிலையில், டிஜிட்டல் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காகவும், மொபைல் புக்கிங்கை ஊக்குவிப்பதற்காகவும் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, ஆர்-வேலட்டில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 5 சதவீதம் போனஸ் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்-வேலட்டிற்கு ரூ. 1,000-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ. 1,050 வழங்கப்படும். இந்தத் திட்டம் நாளை (மே 24) முதல் 3 மாதங்களுக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...