முதலமைச்சர் பதவி விலகக்கோரி மறியல் செய்த ஸ்டாலின் கைது

சென்னை: தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.


சென்னை: தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.



ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை தி.மு.க.,வினர் புறக்கணித்தனர். மேலும், முதலமைச்சர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கைது 

இதையடுத்து அவைக் காவலர்கள் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அவர் தலைமை செயலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார். அவருடன் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். மேலும், போராட்டம் நடத்திய தி.மு.க., நிர்வாகிகளையும் கைது செய்தனர். 



ஸ்டாலின் ஏற்றப்பட்ட வேனை நகர விடாமல் தடுக்கும் வகையில் தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பெரும் திணறினர்..

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...