ஜூலை 20 முதல் தமிழகத்தில் 15 லட்சம் லாரிகள் இயங்காது

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை: டீசல் விலை உயர்வு சுங்க வரி கட்டணம் உயர்வு, காப்பீடு விலை உயர்வு போன்றவற்றை குறைக்கக் கோரி வரும் ஜூலை மாதம் 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் இணை செயலாளர் கே.எஸ். கலியபெருமாள் கூறுகையில், "நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம் ஆறு மாத காலத்திற்கு ஒரு முறை சுங்க வரி கட்டணமும் உயர்கிறது. காப்பீடு நிறுவனங்களும் விலைகளை உயர்த்தியுள்ளன. இது போன்று அனைத்து வகை கட்டணங்களும் உயர்ந்துள்ளதால், லாரிகளை இயக்க முடியாமல் சுமார் 25 சதவீதம் பேர் இந்த தொழிலை விட்டே சென்று விட்டனர்.

லாரிகள் சீராக இயங்கி இந்தியா முழுவதும் பொருட்களை கொண்டு போய் சேர்த்தால் தான் இந்தியாவின் பொருளாதாரம் சீராக இருக்கும். லாரி வாடகை உயர்த்தினால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரும். அண்டை மாநிலமான கார்நாடகவில் டீசலுக்கான உள்ளூர் வரி ரூ. 3.50 குறைக்கப்பட்டுள்ளன. அதே போல் தமிழகத்திலும் இது குறைக்கப்பட வேண்டும்.

ஜூலை 20-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். சுமுகமான தீர்வு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படும், இல்லை என்றால் போராட்டம் தொடரும்." என்றார்.

கோவையில்

கோவையில் மட்டுமே சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளூர் மற்றும் வெளியூர் வணிகங்களுக்கு இயக்கப்படுக்கின்றன. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் லாரி தொழிலை நம்பியுள்ள ஓட்டுனர்கள், கிளினர்கள், கூலி தொழிலாளிகள் வேலை இன்றி பாதிக்கப்படுவார்கள்.

இது குறித்து லாரி ஒட்டுனர் மாரிமுத்து கூறுகையில், "லாரி ஒட்டுவதில் ஏற்கனவே மாதம் 15 நாட்கள் தான் வேலை உள்ளது. விலை வாசி உயர்வால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம். அது மட்டுமல்ல வேலை நிறுத்தம் தொடங்கினால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்." என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் குப்புராஜ் கூறுகையில், "மக்களை பாதிக்கும் முன் லாரி உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே பெரும்பாலான பொருட்களில் விலை வாசி உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்." என்றார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...