வாடிக்கையாளர்களின் கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம்: கருப்புப் பணத்தை புழக்கத்திற்குக் கொண்டுவர வங்கி அதிகாரிகள் உடந்தையா..?

கோவை: கோவை நீலாம்பூரில் உள்ள தேசிய வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவை நீலாம்பூரில் உள்ள தேசிய வங்கியின் வாடிக்கையாளர்களின் கணக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பழமையான கனரா வங்கியின் கிளை நீலம்பூரில் உள்ளது. அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த வங்கி தொழில் தொடங்க ஏதுவாக மானிய கடன் வழங்கி வருகிறது. இதனால், இங்கு 60 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. அதில், உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கூட்டுக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. தாங்கள் பெற்றுள்ள கடனுக்கான தவணையை அதில் அவர்கள் செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், அவர்களது வங்கிக் கணக்குகளில் கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதும், செலுத்திய ஓரிரு நாட்களில் அந்தத் தொகை மீண்டும் எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களுக்கே தெரியாமல் அவர்களது கணக்கில் பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது அனைவரிடத்தில் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் மனுவாக புகார் தெரிவித்து விளக்கம் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் ரிசர்வ் வங்கிக்குப் புகார் அனுப்பியுள்ளனர். அடுத்ததாக சிபிஐயில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சார்ந்த ராமமூர்த்தி என்பவர் கூறியதாவது :- கடன் பெற்ற பயனாளிகள் வங்கிக் கணக்கில் எதற்காக இவ்வளவு பெரிய தொகை செலுத்தப்பட்டது. யார் செலுத்தினார்கள், எதற்காக திரும்ப எடுக்கப்பட்டுள்ளது என எந்த தகவலும் இல்லை. வங்கிக் கணக்கு புத்தகத்திலும் எங்கிருந்து பணம் வந்தது என்ற தகவலும் இல்லை. எனவே, விளக்கம் கேட்டு கடந்த 10-ம் தேதி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை.

மாறாக, அனைவரது வங்கி கணக்கு புத்தகத்தையும் பெற்றுக் கொண்டு, எந்த தகவலும் இல்லாத வகையில் புதிய புத்தகங்கள் கொடுக்க தொடங்கியுள்ளனர். பெரும் தொகையை பரிவர்த்தனை செய்ததற்கான வட்டியை மக்களிடம் பிடித்தம் செய்திருக்கிறார்கள். இதில், 700-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால், அவர்களது கணக்குகளின் மூலம் கோடிக்கணக்கில் கருப்புப்பணம் புழக்கத்துக்கு கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. ஆகவே, ஆர்.பி.ஐ., சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும், என்றார். 

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...