துப்பாக்கிச்சூடு சம்பவம் மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் - முத்தரசன்

திருப்பூர்: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக காவல் துறை கூலிப்படையாக செயல்பட்டுள்ளது. ஆலை நிர்வாகத்திற்காக மாநில அரசு சார்பில் துப்பாக்கிச் சூட்டிற்காக தனி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது .அப்போது மாவட்ட ஆட்சியரோடு பயிற்சி பெற்றவர்கள் எடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி போராட்டம் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, மக்களை உள்ளே அனுமதிக்காத நிலையிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வாகனங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. அவை போலீசாரால் வைக்கப்பட்டதாகவே அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட நிலையிலும், முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது. ஐந்து நாட்களாகியும் இந்திய பிரதமர் அனுதாபமோ, ஆறுதலோ தெரிவிக்கவில்லை, இதிலிருந்தே மோடி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் என தெரிகிறது. இச்சம்பவத்தைக் கண்டித்து போராடியவர்கள் மீதும், மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததற்காக எங்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதற்காக தூக்கு தண்டனை கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்வோம். சட்டப்படி அதனை எதிர்கொள்வோம். இச்சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை வேண்டாம். பணியில் உள்ள நீதிபதி தலைமையில் தான் விசாரணை நடத்த வேண்டும். தூத்துக்குடி சம்பவத்தில் தோற்றுப்போன அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். அரசுக்கு இது போன்ற நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையிலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்பவும் தற்போது முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவை துணைக்கு அழைத்து அவரது ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதனால், தூத்துக்குடியில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மத்திய அரசு தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எதையும் செய்யவில்லை, அதன் நேரத்தில் மதக்கலவரங்கள், பாலியல் வன்கொடுமை ஆகியவையே அதிகரித்துள்ளது. அதுவே நான்காண்டு சாதனை. நீதிமன்றமே பலமுறை கண்டனம் தெரிவித்தும் தமிழக காவல் துறை பா.ஜ.க.,வை சேர்ந்த எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் இருப்பதிலே மத்திய அரசுக்கு மாநில அரசு துணை போயுள்ளது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...