உயிரைப் பொருட்படுத்தாத ஆபத்தான குளியல் : கட்டுப்பாடுகளை விதிக்குமா மாவட்ட நிர்வாகம்

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆபத்தான சூழலை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதால், உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். 



வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக விளங்குவது கூழாங்கல் ஆறு. இங்கு கோடை விடுமுறை நாட்களில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஆற்றுப் பகுதியின் ஒரு பகுதியில் ஆழமான சுழல் உள்ளது. கடந்த சில வருடங்களில் சுற்றுலா வந்தவர்களில் 3 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், இந்தத் தடையை பொருட்படுத்தாமல் ஆபத்தான சுழல் பகுதிக்குள் நுழைந்து குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என்றே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, கூழாங்கல் பகுதியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்கும் வகையில், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தான பகுதிகளைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...