பாரம்பரிய கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு கற்றுத்தரும் மனிதநேயமிக்க தலைமை ஆசிரியர்

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கோவை: கோவையில் பாரம்பரியமிக்க கிராமிய கலைகளை பொதுமக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

கோவை கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (48) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே சமயத்தில், சங்கமம் கலைக்குழுவின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். கிராமிய கலைகள் மீது இருந்த ஆர்வம் காரணமாக 1990-ம் ஆண்டு முதல் கிராமிய கலைகளைக் கற்றுக்கொண்டார். அதன்பின், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு இக்கலையின் மீது ஆர்வத்தைத் தூண்டவும் 2010-ம் ஆண்டு சங்கமம் கலைக்குழு ஒன்றை ஆரம்பித்தார். 



அச்சங்கம் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக 850 கிராமிய கலைஞர்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு இலவசமாக பயிற்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கனகராஜ் கூறுகையில், "இந்தக் கலை மூலமாக நல்ல பழக்கங்களையும், நல்ல உறவையும் கொண்டு வர முடியும். 



இந்தக் கலையை கற்றுக்கொண்டால் மன உளைச்சல் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாட்டுபாவடை, வேட்டி போன்றவை இக்கலையில் பயன்படுத்தப்படுவதால் பாரம்பரிய உடைகள் மீது மக்களுக்கு ஆர்வம் வரும்.

இறைவழிபாடு செய்து வணக்கம் வைத்து தொடங்கப்படுவதால், இக்கலையைப் பயின்றோர் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். சாதி, மதம் என இன வேறுபாடின்றி இக்கலையை மக்கள் கற்றுக்கொள்வதால், சமத்துவம் மக்களிடையே உருவாகிறது. சமூக பிரச்சனைகளை மக்களிடையே எடுத்துக் கூறுவதற்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இக்கலை பயன்படுகிறது. கல்வி பாடத்திட்டத்தில் இக்கலை குறித்து பாடம் சேர்க்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.



கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம் என்ற கிராமத்தில் இவரிடம் ஒயிலாட்டத்தைக் கற்றுக்கொண்ட 4 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர் வரை 80 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஒயிலாட்டத்தை அரங்கேற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...