வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் வீட்டிற்கு வந்த பின்னரும் வெகுநேரம் படிக்க வேண்டியதாக உள்ளது. 

இதையடுத்து, புருசோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை செய்த நீதிபதி கிருபாகரன், 1,2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என உத்தரவிட்டார். அதனை மீறி வீட்டுப்பாடம் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். 

மேலும், பாடத்திட்டங்களை அமைக்கும் போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும். கவுன்சில் பரிந்துரைத்த பாடங்களை மட்டுமே தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர்களுக்கு நடத்த வேண்டும், எனத் தெரிவித்தார். 

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...