மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை

மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய விதிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணைப் பிறப்பித்துள்ளது.

மதுரை: மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய விதிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணைப் பிறப்பித்துள்ளது. 

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு தெரிவித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர் மடாதிபதியாகப் பொறுப்பு ஏற்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, நித்யானந்தா சார்பில், இளைய மடாதிபதியாகத்தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டதாகவும், அதில் இருந்து விலக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, நித்யானந்தா மடாதிபதி பொறுப்பில் இருப்பது செல்லாது. அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நித்யானந்தாவுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, தன்னை மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக அறிவித்துக்கொண்டதை திரும்பப் பெற்றதாக நீதிமன்றத்தில் நித்யானந்தா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்தும், அதன் நிர்வாகத்தில் தலையிட தடை விதித்தும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நித்யானந்தா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழையத் தடைவிதித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தாவின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை வழங்கியுள்ளது. வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...