சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: சிறுபான்மையின பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சிறுபான்மையினர் குழந்தைகளுக்கு கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி உதவி அளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி கோரும் சிறுபான்மையின பள்ளிகளுக்கு மதிப்பீட்டுத் தொகையில் ரூ.50 லட்சம் மிகாமல் மைய அரசின் நிதி உதவி வழங்கப்படுகிறது. 

இந்த திட்டம் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் www.mhrd.gov.in/idmi என்ற இணையதள முகவரியில் உள்ளது. 

அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...