உதகை நகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது வழக்கு தொடர முடிவு

உதகை: உதகை நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் இருக்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

உதகை: உதகை நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் இருக்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. 

 

உதகையில் தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், அந்த இயக்கத்தின் சட்ட ஆலோசகர் முரசொலி மாறன் பேசியதாவது :- உதகை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு நகராட்சி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, ஓய்வு பெற்றுள்ள துப்புரவு பணியாளர்கள் நகராட்சி குடியிருப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக குடியிருந்து வருகின்றனர். 



இவ்வாறு அங்கீகாரமற்றவர்களை வெளியேற்றாமல், உயர்நீதிமன்ற ஆணையை அவமதித்து மற்றும் வாடகையை அரசு ஆணை எண் 454 நாள் : 08.12.2011-ன்படி உயர்த்தாமல் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், உதகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காத உதகை நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி வருவாய் அலுவர்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம், இவ்வாறு கூறினார். 

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...