அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டுபிடிக்க, 'சூயஸ்' நிறுவனம் களஆய்வு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறியும் ஆய்வில் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 'சூயஸ்' என்கிற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக, வீடு வீடாகச் சென்று குடிநீர் பயன்பாடு மற்றும் விநியோக அளவு பற்றிய தகவல்களை திரட்டும் பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகின்றது. கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், அணைகளில் இருந்து தற்போது பெறப்படும் குடிநீர் அளவு, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக இணைப்புகளுக்கு விநியோகிக்கப்படும் அளவுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்படுகின்றன. இதற்காக, மூன்று குழுக்கள் சூயஸ் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வில், வீட்டின் உரிமையாளர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, குடிநீர் இணைப்பு எண், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது, குடியிருப்பு பகுதியின் மொத்த மக்கள் தொகை, வர்த்தக இணைப்புகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதியப்படுகிறது.

குடியிருப்பு மற்றும் வர்த்தக இணைப்பு என்று மொத்தம் இரண்டு லட்சம் இணைப்புகளுக்கு மட்டுமே மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணைப்பு வழங்கியுள்ளது. ஆனால், நகரின் ஏராளமான பகுதிகளில் மாநகராட்சி அனுமதியின்றி உருவாக்கப்பட்டுள்ள இணைப்புகளால் பல லிட்டர் குடிநீர் திருடப்படுகிறது.

இதைக் கண்டறிந்து தக்க நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் விநியோகத்தை சீர் செய்யவும் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆய்வின் முடிவுகள் உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...