உதகையில் பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் வெளியேறிய புகை: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: உதகை அருகே உள்ள நீத்திபகுதியில் சில மாத இடைவெளிக்குப் பிறகு பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் புகைவெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: உதகை அருகே உள்ள நீத்திபகுதியில் சில மாத இடைவெளிக்குப் பிறகு பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் புகைவெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தலைக்குந்தா முத்தநாடு மந்துவில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். முத்தநாடு மந்து அருகேயுள்ள நீத்திபகுதி வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கற்பூரம் உட்பட பலவகை மரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் கடந்த 2007 மே மாதம் நிலத்தடியில் இருந்து புகை வெளியேறியது. அதன்தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 27/ம் தேதி நிலத்தடியில் இருந்து புகை வெளியேறியதால் செடி, கொடிகள் கருகியது. 

இதனைத் தொடர்ந்து, நிலத்தடியில் இருந்து வெளியேறும் புகை தொடர்பாக புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் நிலத்தடியில் இருந்து மீண்டும் புகை வெளியேறி வருகிறது. 



இதற்கு என்ன காரணம் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, முத்தநாடு மந்து பகுதியில் உள்ள நிலத்தடி மண் மிக இளகியதாக இருப்பதால், விரிசல்கள் பலமாக உள்ளன. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், பூமிக்கு அடியில் செல்லும் மழை நீர் வெப்பமாகி, புகை வெளியேறுவதைப் பார்க்க முடிகிறது. இதனால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது என புவியியல் துறையினர் கூறியுள்ளனர், இவ்வாறு தெரிவித்தனர். 



இதனிடையே, இப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் இறந்துள்ளதாகப் பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இப்பகுதியில் இருந்து ஒரு வகையான துர்நாற்றத்துடன் புகை வெளியேறுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...