உக்கடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: இன்று முதல் அமல்

கோவை: மேம்பாலப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உக்கடம்-ஆத்துப்பாலம் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


கோவை: மேம்பாலப் பணிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து உக்கடம்-ஆத்துப்பாலம் வரையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

உக்கடம் பகுதியில் மேம்பாலம் பணிகள் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை தற்காலிகமாக அகற்றிட வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், லாரிகள் நகரத்திற்குள் புகுவதிலும் மாற்றங்களை செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை உக்கடம் போலீசார் சாலையோர வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவ்வாறு, லாரிப்பேட்டை மற்றும் உக்கடம் பகுதியில் கடைகள் அமைத்துள்ளவர்களை தற்காலிகமாக காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "இன்று முதல் இந்த திட்டத்தை போலீசார் அமல்படுத்துவதாக கூறினார். எங்கள் வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால், போலீசார் சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்." என்றனர்.

போக்குவரத்து மாற்றம்

*திருச்சியில் சாலையில் இருந்து பொள்ளாச்சி சாலை செல்லும் லாரிகள் ராமநாதபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டும்.



*இதே போல, பாலக்காடு சாலை, ஆத்துப்பாலம் செல்லும் லாரிகளும் அதே வழியைப் பின்பற்ற வேண்டும்.

*பொள்ளாச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலையில் இருந்து திருச்சி சாலை மற்றும், அவினாசி சாலைக்கு செல்லும் கனரக லாரிகள், டிப்பர் லாரிகள் போத்தனூரில் இருந்து ராமநாதபுரம் வழியாகச் சென்று திருச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

*பாலக்காடு-ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், கோவைப்புதூர் பகுதியில் இடதுபுறமாகத் திரும்பி புட்டுவிக்கி சாலையை அடைந்து, பொன்னையராஜபுரம் வழியாகச் சென்று தடாகம் சாலையை அடையலாம்.

*உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து போத்தனூர், குனியமுத்தூர் செல்லும் பேருந்துகள் வழக்கமான பாதையில் இயங்கலாம்.

*உக்கடம் சந்திப்பில் இருந்து லாரிப்பேட்டை, ஆத்துப்பாலம் சந்திப்பு வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை லாரிகள், ஈச்சர் வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்வாறு போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...