காரமடை பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கக் கூண்டு வைத்த வனத்துறையினர்

கோவை : காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளன

கோவை : காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிக்குள் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். 

கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை பகுதிகளில் அண்மைக் காலமாக வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. காட்டுயானை கூட்டங்கள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி வரும் நிலையில், கடந்த இரு மாதங்களாக சிறுத்தைகளும் வனத்தை விட்டு வெளியேறி கிராமப்புறங்களில் நடமாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. நள்ளிரவு நேரங்களில் நுழையும் சிறுத்தை விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும் கன்று குட்டிகள் மற்றும் ஆடுகளை அடித்துக்கொன்று விடுகின்றன.

மேலும் தோட்டக்காவலுக்கு இருக்கும் நாய்கள் மற்றும் தெரு நாய்களையும் கூட கொன்று இழுத்து சென்று விடுகின்றன. மேட்டுப்பாளையம் நகரை அடுத்துள்ள மோத்தேபாளையம் என்னும் கிராமத்தில் கடந்த இரு வாரத்தில் மட்டும் ஒரு கன்றுக்குட்டி மற்றும் மூன்று நாய்களை சிறுத்தை அடித்து கொன்றுள்ளதாக வனத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. ஊர் மக்களின் புகாரையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய வனத்துறை அதிகாரிகள், நாய்கள் கொல்லப்பட்ட விதம் மற்றும் காலடி தடயங்களை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

இதனையடுத்து மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள மலையடிவாரத்தில் இருந்து சிறுத்தை ஊருக்குள் நுழையும் பகுதியை கணக்கிட்டு அப்பகுதியில் தற்போது கூண்டை வைத்துள்ளனர். கூண்டுக்குள் ஆடு அல்லது நாயை கட்டி வைத்து அதனை தாக்க வரும் சிறுத்தையினை பிடிக்க சிறுமுகை வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

இதேபோல, காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேடூர், பாறைப்பள்ளம், பனப்பாளையம், வெள்ளியங்காடு கிராமங்களிலும் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகியுள்ளதால், இங்கும் இதுபோன்ற கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியினை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...