பொறியியல் கல்லூரிகளுக்குள் 'நீட்'டை புகுத்த முயற்சி: கோவையில் வைகோ பேட்டி

கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை என்றும், பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் இந்த தேர்வை புகுத்த முயற்சி செய்வதாகவும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதால் திருச்சியில் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கின்றது. உலக புகழ் பெற்ற மருத்துவர்கள் பலர் உள்ளூர் பள்ளியில் படித்தவர்கள் என்பதை நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுபவர்கள் உணர வேண்டும்.

மத்திய அரசின் நீட் தேர்வு திட்டமிட்ட நயவஞ்சக நடவடிக்கை. இந்த தேர்வினை பொறியியல் கல்லூரிகளுக்குள்ளும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நீட் தேர்வு வளரும் பிள்ளைகளின் கல்வியை, எதிர்காலத்தை பாதிக்கும். இதனால், மாணவர்கள் பலர் மனதுக்குள் நொந்து கொண்டு இருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் என்பவர் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என்று தெரிவிக்கின்றார். ஆலையை மூடுவதாக கூறுவது தமிழக அரசின் சதி நாடகம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல.

இதனால், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கி விட வாய்ப்பு உள்ளது. சட்டசபையைக் கூட்டி, மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி, ஆலையை மூட சட்டம் கொண்டு வந்த பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அப்போது தான் மீண்டும் ஆலையைத் திறக்க முடியாது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே போராடி வருகின்றோம் நாங்கள் சமூக விரோதிகளா? சுட்டுக் கொல்லப்பட்ட மக்கள் சமூக விரோதிகளா? ஸ்டெர்லைட் எங்கு லைசென்ஸ் வாங்கினாலும், அதற்கு எதிராக போராடுவோம். மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியை விட உக்கிரமான போராட்டம் தமிழகத்திலும் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...