குவைத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் கோவை வீராங்கனை சாம்பியன்

கோவை: குவைத் நாட்டில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை சரண்யா தேவி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கோவை: குவைத் நாட்டில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கோவையைச் சேர்ந்த வீராங்கனை சரண்யா தேவி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சரண்யா தேவி. குவைத்தில் கணவருடன் வசித்து வரும் சரண்யா தேவி, அங்கு இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். கோவையில் கல்லூரி படிக்கும் போதே காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் ரைப்பிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற அவர், குவைத்திற்கு சென்று பிறகு, அங்கும் ரைப்பிள் கிளப்பிலும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியைத் தொடர்ந்து வந்தார். 



இந்நிலையில், குவைத் நாட்டில் அல் மெய்தான் மைதானத்தில் நடைபெற்ற அல்கந்தாரி சாம்பியன் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், அவர் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் சரண்யா தேவி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அங்குள்ள உள்ளூர் வீரர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார். கோவையில் பயிற்சி பெற்ற போது கிடைக்காத வெற்றி, தனக்கு குவைத் நாட்டில் கிடைத்து இருப்பதாகவும், கோவையில் பெற்ற பயிற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் என சரண்யா தேவி கூறுகிறார். 

தங்களது மகள் குவைத்தில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர் கோவையில் உள்ள சரண்யா தேவியின் பெற்றோர். "கல்லூரியில் படிக்கும் போதே சரண்யா துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றார். திருமணத்திற்குப் பின்னர் குவைத் சென்றும் பயிற்சியைத் தொடர்ந்தார்," இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். 



தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் குவைத் நாட்டில் துப்பாக்கிச் சுடுதலில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என தெரிவிக்கும் சரண்யாவின் தந்தை, குவைத் நாட்டில் உள்ள தமிழ் வம்சாவளி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் பணியையும் செய்து வருவதாகப் பெருமையுடன் தெரிவிக்கின்றார்.

குவைத் நாட்டில் நடைபெறும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், கோவையைச் சேர்ந்த பெண் குவைத் நாட்டு வீர்ரர்களுடன் போட்டியிட்டு, சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது குவைத் வாழ் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...