மசினகுடியில் உடும்பை வேட்டையாடிய இருவர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மசினகுடி சரகம் அவரல்லா பில்சோனா வனப்பகுதியில் இருவர் சந்தேகிக்கும் வகையில் சுற்றித் திரிந்து வந்தனர். இதனைக் கண்ட அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள், உடனடியாக மசினகுடி சரகர் என். மாரியப்பனுக்கு தகவல் கொடுத்தனர். அவரின் உத்தரவின் பேரில் இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் உடும்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் பூதநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சன் (48) மற்றும் ரமேஷ் (38) என்பது தெரியவந்தது.



சட்டவிரோதமாக உடும்பை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பிடிபட்ட உடும்பு கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.



Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...