போளுவாம்பட்டி அருகே குடிபோதையில் தாறுமாறாக ஓட்டியக் கார் மோதி 2 பேர் படுகாயம்

கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

கோவை: கோவை அருகே குடிபோதையில் ஓட்டிச் செல்லப்பட்ட கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

சிறுவாணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், போளுவாம்பட்டி பகுதியில் வெள்ளை நிற ஸ்விப்ட் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. குமரன் கல்யாண மண்டபம் அருகே இந்த கார் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்தோஷ் ராஜ் என்பவரும், அவரது தாயும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தாமல் சென்றது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், காரை விரட்டிச் சென்றனர். இதையறிந்து, மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாது என்று அறிந்த ஓட்டுநர் உள்பட அதில் பயணித்தவர்கள், காரை பாதியில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர், அங்கு சென்ற அப்பகுதியினர், காரை சோதனை செய்ததில், உள்ளே ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தைக் கண்டனர். எனவே, காரில் இருந்த 4 அல்லது 5 இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.



இதனிடையே, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, ஆலந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...