நீலகிரியில் தொடர் மழையால் 2-வது நாளாக மின்சாரம் துண்டிப்பு: மக்கள் அவதி

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி: மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இரு தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதனால், மின் கம்பிகள் சேதமடைந்து நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தடைபட்டுள்ள மின் விநியோகத்தை சீர் செய்வதில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.



அடர்ந்த மரங்கள் உள்ள பார்ஸன் நீர்த்தேக்கத்திற்கு வரும் மின் கம்பிகள் மீது மரம் விழுந்து மின் விநியோகம் தடைபட்டது. இதனால், நீரேற்றும் பணியும் தடைபட்டு, உதகை நகருக்கு குடிநீர் விநியோகம் கடந்த மூன்று தினங்களாக தடைப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படகு சவாரி

உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அதிக மழை மற்றும் காற்று வீசும் போது, மிதி படகுகள் மற்றும் மோட்டார் படகுகள் சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.



Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...