மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து இரண்டாவது நாளாக தண்ணீர் திறப்பு

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர கிராம மக்களுக்கு இரண்டாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி மற்றும் கேரள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து 10,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

இதனால் அணையில் இருந்து நான்கு மதகுகளில் இருந்தும், மின் இயக்கத்திற்காகவும் 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் இருகரையையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது. 

எனவே, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியில், நீர் இருப்பு 97 அடியாக உள்ளது.

மேலும் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் இரவில் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...