கனமழை காரணமாக கோவை, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கோவையில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

கோவை: கோவையில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் அறிவித்துள்ளார். 

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல, வால்பாறையில் வெளுத்தும் வாங்கும் மழையால், அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதேபோல, நீலகிரியில் உதகை, கூடலு}ர் மற்றும் பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அறிவித்துள்ளார்.

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...