தேயிலை விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்: அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

நீலகிரி: தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரி: தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என குன்னூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு விலைநிர்ணயம் செய்யக்கோரியும், நிலுவை தொகையை வழங்கக் கோரியும் குன்னுார் தேயிலை வாரியம் அலுவலகம் முன்பு தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் படுக தேச கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பின்னர், அவர்களிடம் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் 15-ம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

இதனிடையே, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு பேசுகையில், "தேர்தல் வரும் போது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாகவும், தேர்தல் முடிந்துவிட்டால், அவர்கள் இந்த நாட்டின் அடிமைகளாவர். விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கொடுக்க மறுக்கின்றனர். பசுந்தேயிலைக்கு விலையாக ரூ. 50 கொடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது கூட்டுறவு சங்கத்தில் லாபம் கிடைத்தது. ஊட்டி தேயிலை என்று விற்பனை செய்தார்கள். நான்கு கிலோவிற்கு ரூ. 120 ஆகிறது. அத்துடன் ரூ. 50-ஐ சேர்த்து ரூ. 200-க்கு விற்பனை செய்யலாம். 

இதனால், பொதுமக்களும், தேயிலை விவசாயிகளும் பயன்பெறலாம். மேலும், தேயிலை விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். படுக இன மக்கள் செய்யும் தேயிலை தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது. படுக மக்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்க வேண்டும்," என்றார். 

Newsletter

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...