பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை ஏழாக உயர்வு

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பலியாகிய நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஆறு பேர் பலியாகிய நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.



ஊட்டியில் இருந்து 12 பெண்கள் உட்பட 34 பயணிகளுடன் குன்னூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மதாடா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 



இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திகற்கு சென்ற கேத்தி போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். 



அங்கிருந்து அல்மஷ் (29) என்ற பெண் உட்பட 16 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...