சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- மகுன்டஞ்சாவடி - வீரபாண்டி சாலை, மவேலிபாளையம் - மகுன்டஞ்சாவடி, சங்கரி துர்க் - மவேலிபாளையம் ஆகிய இடங்களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதனால், சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில், 13-ம் தேதி முதல் ஜுலை 03-ம் தேதி வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோவை - சேலம் - கோவை இடையே இயக்கப்படும் ரயில் (எண் : 66602/66603) ஈரோடு-சேலம்-ஈரோடு இடையிலான சேவையை வரும் 20-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலின் சேவை அடுத்த மாதம் 03-ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படும். 

இதேபோல, வரும் 26-ம் தேதி வரை இயக்கப்படும் குறிப்பிட்ட ரயில்கள் சில தினங்களுக்கு தாமதமாக இயக்கப்படுகின்றன. ஐதராபாத் - கொச்சுவெளி வாராந்திர சிறப்பு ரயில், பிலாஷ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில், திருவனந்தபுரம்- மும்பை எக்ஸ்பிரஸ், அலப்பி-டாடா அல்லது தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரூ அதிவிரைவு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பிலாஷ்பூர்- திருநெல்வேலி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோவை- சென்னை கோவை எக்ஸ்பிரஸ், ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட இருக்கின்றன. 

ஈரோடு-திண்டுக்கல் இடையே மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகள் காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி- ஈரோடு பயணிகள் ரயில், ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் வரும் 26-ம் தேதி வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதே போல, அடுத்த மாதம் 9-ம் தேதி கோவை-நாகர்கோவில், திருநெல்வேலி-ஈரோடு பயணிகள் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில்சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரும் 18-ம் தேதி சேலம்-விருதாச்சலம் பயணிகள் ரயில் ஆத்தூர்-விருதாச்சலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. 



இதனிடையே, சேலம் தெற்கு ரயில்வே சார்பில் சங்கரி துர்க் பகுதியில் ஆபத்து கால மீட்புக் குழுவினருக்கு முன்னெச்சரிக்கை மீட்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...