மாட்டின் பெயரால் இரண்டு முஸ்லிம்கள் கொலை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாட்டின் பெயரால் இரண்டு முஸ்லிம்கள் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாட்டின் பெயரால் இரண்டு முஸ்லிம்கள் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக, அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எம்.தவ்ஃபீக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

ஜார்கண்ட் மாநிலத்தில் குட்டா என்ற மாவட்டத்தில் எருமை மாடுகளை விலைக்கு வாங்கி வியாபாரத்திற்காக சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இரண்டு முஸ்லிம்கள் பன்னட்டி கிராமம் அருகே வாகனத்தில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை இடைமறித்த கும்பல், இருவரையும் கடுமையாகத் தாக்கி, அவர்களைக் கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று, மேலும், துடிக்கத்-துடிக்க அவர்களை அடித்துக் கொலை செய்துள்ளது. இந்த காட்டு மிராண்டி தனத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாகக் கண்டிக்கிறது.

இக்கொலைச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்ததோடு நின்றுவிடாமல், பிணையில் வெளிவர விடாமல், மக்கள் மன்றத்தின் முன், விரைந்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்கள், இந்திய நாட்டில் வாழ்வதற்கே பாதுகாப்பற்ற ஓர் அச்ச நிலை இருந்து வருவதை இந்த சம்பவம் மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் பிரதமரின் கண்டிப்பு வெறும் கண்துடைப்பு என்பது உறுதியாகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...