பில்லூர் அணையில் உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: பவானி ஆற்றில் வேகம் குறைந்தது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக, வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக, வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக, அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 10-ம் தேதி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான நூறு அடியை எட்டி நிரம்பியது. இதனையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 10,000 முதல் 24,000 கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. 

இதன் காரணமாக, ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. கடந்த 10-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் பில்லூர் அணை நிரம்பி வழிந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு குறைந்து வருவதால் நீர்வரத்தும் சரிந்துள்ளது. 

இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக திறக்கப்பட்ட அணையின் நான்கு மதகுகளில், 2 மதகுகள் இன்று காலை மூடப்பட்டன. இதனால், அணையின் உபரிநீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது. பின்னர், சில மணி நேரங்களில் மீண்டும் திறக்கப்பட்டிருந்த மேலும் 2 மதகுகளும் மூடப்பட்டு, அணையின் நீர் வெளியேற்றம் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால், பவானி ஆற்றின் வேகமும் ஓரளவு குறைந்து வருகிறது.



தற்போது, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளது. இந்தத் தண்ணீர் மட்டும் நீர்மின் உற்பத்திக்காக ஆற்றில் இருந்து தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் தற்போது 96 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பில்லூர் அணை மூடப்பட்டு விட்டதால் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.​

Newsletter

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...