கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளலூர் குளத்தைச் சென்றடைந்த நொய்யல் ஆற்று நீர்

கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களின் கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் தொட்டிக்கு நொய்யல் ஆற்றுநீர் சென்றடைந்தது.


கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்களின் கூட்டு முயற்சியால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் குளத்திற்கு நொய்யல் ஆற்றுநீர் சென்றடைந்தது.

கடந்த சில நாட்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால், மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சிறுவாணி அணையில் நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நொய்யல் ஆறு மற்றும் அதன் நீர்பிடிப்புப் பகுதிகள் அதிகளவு நீர்வரத்தைப் பெற்றுள்ளன.



நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேறும் நீர், ராஜவாய்க்கால், சேத்துமா உள்ளிட்ட வாய்க்கால்களின் மூலமாக வெள்ளலூர் குளத்தை வந்தடைகிறது. மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சிறுதுளி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து ராஜவாய்க்காலில் இருந்த சுமார் 1,600 ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளலூர் குளத்திற்கு நீர் பாய்ந்து செல்லும் பகுதிகளை தூர்வாரி, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளலூர் குளத்திற்கு நொய்யல் ஆற்றின் நீர் சென்றடைந்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



"தற்போது வரை தூர்வாரும் பணி முழுவதும் நிறைவடையவில்லை. நீர்செல்லும் வழித்தடங்களான வாய்க்கால்களில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மழையினால் மட்டுமே வெள்ளலூர் குளம் நிரம்பிவிடாது. இந்தப் பருவமழை முடிவதற்குள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் தடையின்றி பாய்ந்தால் மட்டுமே குளம் நிரம்பி வழியும்," இவ்வாறு தன்னார்வலர் மணிகண்டன் கூறினார்.



95 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வெள்ளலூர் குளமானது 15 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இதன்மூலம், 327 ஏக்கர் விவசாயங்கள் நேரடியாகவும், 20 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவோ பாசனவசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...