பயணிகளின் நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்ட எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் வரையில் இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எர்ணாகுளம் ரயில்நிலையம் - ஐதராபாத் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07118) ரயிலின் சேவை அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் வியாழக்கிழமைகளில் இரவு 09.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 10.55 மணியளவில் ஐதராபாத் சென்றடைகிறது. 

ஐதராபாத் - எர்ணாகுளம் ரயில்நிலையம் இடையே இயக்கப்படும் (ரயில் எண். 07117) ரயிலின் சேவை அடுத்த மாதம் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் புதன்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் மாலை 05.30 மணியளவில் எர்ணாகுளம் சென்றடைகிறது. 

இதேபோல, கொச்சிவெலி - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் கொச்சுவெலியில் இருந்து காலை 07.45 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், மறுநாள் மதியம் 02.00 மணியளவில் ஐதராபாத்தை அடைகிறது. 

ஐதராபாத் - கொச்சிவெலி சிறப்பு கட்டண ரயிலின் சேவை அடுத்த மாதம் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் ஐதரபாத்தில் இருந்து இரவு 09.00 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், திங்கட்கிழமை 03.20 மணியளவில் கொச்சிவெலியை அடைகிறது. 

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...