கவிஞர் கவிதாசனுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கிய கோவை ரோட்டரி சங்கம்

கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

கோவை: கோவை ரோட்டரி சங்கம் சார்பில் 'தொழில் வித்தகர் விருது' வழங்கும் விழா, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கடந்த 30 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டிலும், தனிமனித முன்னேற்றத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர், தமிழ் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு 'தொழில் வித்தகர் விருது' வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கவுரவிக்கும் விதமாக கோவை ரோட்டரி சங்கம் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில், கவிஞர் கவிதாசன் பேசுகையில், "நெல்லிக்கணி என்ற இளைஞர் முன்னேற்ற திட்டத்தில் ரோட்டரி சங்கத்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை இளைஞர்களோடும் மாணவர்களோடும் பகிர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதற்காக அளிக்கப்பட்ட இந்த விருதை என்னோடு பயணிக்கும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், இலக்கிய துறையை சேர்ந்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலையிலும் இளைஞர்கள் முன்னேற தொடர்ந்து பணியாற்றுவேன்." என்றார்.



விருது வழங்கும் நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் A. பாரி, ரூட்ஸ் நிறுவனங்களின் தலைவர் K.ராமசாமி மற்றும் மாவட்ட தொழில் சேவை இயக்குனர் N.சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

ரோட்டரி சங்க தலைவர் சாண்டியாகோ ஜேசு, திட்ட தலைவர் டாக்டர்.சித்ரா மனோகர், செயலர் ஜ்யோதிஷ் N.பிள்ளை, தொழில் சேவை இயக்குனர் டாக்டர்.N.மகேந்திரன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...