உலக முதியோர் தினம்

உலகமெங்கும் உள்ள மக்கள் தொகையில் சுமார் 60 கோடி பேர் முதியவர்களாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 60 கோடி பேர் தான் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்தவர்கள். அவ்வாறு நம்மை உலகறியச் செய்த பெரியோர்களை கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் உலக முதியோர் தினத்தை கொண்டாடிவருகின்றோம்.



முதுமை

இவ்வுலகில் பிறந்தவர்கள் புறக்கணிக்க முடியாதவைகளுள் ஒன்று முதுமை. யாராலும் மறுக்க முடியாத உண்மை இது. ஆனால் இதனை நாம் அனைவரும் மறந்து விடுகின்றோம். நாமும் முதுமை பருவத்தை  அடையும் காலம் வரும் என்பதை மறந்து மனிதர்கள் சிலர் வீட்டில் இருக்கும் பெரியோர்களை அனுசரிக்க முடியாமல் முதியோர் காப்பகத்தில் சேர்த்தி விடுகின்றனர். அதன்  விளைவு இன்று கோவையில் மட்டும் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 34 முதியோர் காப்பகங்கள் முளைத்துவிட்டன.



இணையதளத்தில் மூலம் இன்று பல்வேறு தகவல்கள் நமக்கு மிகச் சுலபமாக கிடைப்பதால் இன்று பலர் பெரியோர்களின் கருத்துக்களை கேட்பதில்லை. இன்று நம் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு தெரிந்த சித்த மருத்துவமும், அடைந்த அனுபவமும் எந்த இணையதளத்திலும் கிடைப்பதில்லை என்பது நிதர்சணமான உண்மை.

 முதியோர்  இல்லம்

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆதரவற்ற முதியோர் மையம் உள்ளது. ஆண், பெண் என மொத்தம் 40க்கும் மேற்பட்ட முதியோர்கள் இங்கு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தினாலும் படிப்பற்ற பிள்ளைகளாலும் கைவிடப்பட்டவர்கள் அதிகமாகவே இங்குள்ளனர். இங்கு வசித்துவரும் 92 வயதான கார்த்திகாயினி என்ற மூதாட்டி முன்னொரு காலத்தில் கோவையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



அங்கு வசிக்கும் மயிலம்மாள் (86) நம்மிடம் பேசுகையில் “நான் கடந்த 3 வருடமாக இந்த முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் நான் இங்கு இருப்பதை சிரமமாக கருதினர். எனது கணவர் இறந்த பின்பு தண்ணீர் கொடுப்பதற்கும் யோசித்தனர். நான் வளர்த்த பிள்ளைகள் என்னை பாராமாக நினைப்பது பொறுக்காமல் இந்த முதியோர் இல்லத்தில் நான் சேர்ந்துவிட்டேன். ஆயிரம் உறவினர்கள் எனக்கு உள்ளனர். ஆனால் நெருங்கிய உறவினர்கள்  தவிர வேறு யாருக்கும் நான் இங்கு  இருப்பது தெரியாது. மற்றவர்களிடம்  நான் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளேன் என்றார். குடும்பத்தார் தன்னை உதாசீனப்படுத்தும் நிலையிலும், அவர்களுக்கு எந்த ஒரு அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மயிலம்மாலின் பேச்சில் அப்பட்டமாக புலப்பட்டது. இது போன்ற நல்ல எண்ணங்கள் கொண்ட முதுமையைத் தான் இன்றைய இளைய தலைமுறையினர் ஒரே அடியாக புறக்கணித்துவிட்டனர். அதன் விளைவுதான் இன்றைய அடுத்தவர்களுக்காக விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும், பொறாமை குணமும் வளர்ந்து தற்போது பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் கொடுப்பதை இரு நாட்டு போர் போல நடத்தியிருக்கிறோம்.

இது குறித்து முதியோர் இல்லத்தின் நிர்வாகி மகேந்திரன் கூறுகையில்,

நான் கடந்த 5 வருடமாக ஆதவற்ற முதியோர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சி இந்த முதியோர் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை என்னிடம் அளித்தது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இருந்து வந்த முதியோர் இங்கு  மகிழ்ச்சியாக வாழ்ந்து கொ ண்டிருக்கிறார்கள். இங்கு ஒரு சிறிய தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அது இங்குள்ள முதியோர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் காய்கறிகள் அவர்களின் உணவுத் தேவைக்கு பயன்பட்டு வருகிறது.



இன்றைய சூழ்நிலையில் முதியவர்கள் இளைய தலைமுறையினர் இருவரிடம் உள்ள பெரிய தவறு புரிந்து கொள்ளாமைதான். இருவரும் வளர்ந்த சூழ்நிலைகள் வேறு வேறு என்பதை இரு தரப்பினரும் உணர்ந்து கொண்டால் முதியோர் இல்லங்கள் முளைப்பது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதியோர்களை அவமதிக்கும் இன்றைய இளைய தலைமுறைகள் ஒன்றை நினைவு கொள்ள வெண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்று யாரும் நினைக்க வேண்டாம். நாம் அனைத்தையும் கற்று கொண்டதே மற்றவர்களிடம் இருந்து தான். நாட்டின் தூண்கள் இளையதலைமுறையினர் என்றால் வீட்டின் தூண்கள் நம் வீட்டின் பெரியவர்கள்.  வயதானவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் சிலர்  தனக்கும் முதுமை பருவம் வரும் என்பதை மறக்க வேண்டாம்.



இந்த முதியோர் தினத்தில் நம் வீட்டு பெரியோரிடம் ஆசி பெற்று அவர்களை ஒரு போதும் அவமதிப்பதில்லை என்ற உறுதிமொழி  ஏற்றுக் கொள்வோமே!

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...