உயிரை காக்கும் புதிய முயற்சியில் போக்குவரத்து போலீசார்

தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருந்த போதும் பலர் அதை கடைபிடிப்பதில்லை. வாகனத்  தணிக்கையின் போது ரூ.100-ஐ மட்டும் அபராதமாக கட்டிவிட்டு  ஹாயாக பறக்கின்றனர் இரு சக்கர வாகன ஓட்டிகள். 
இந்த நிலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கோவை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறை இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன்  கூறியதாவது :- 
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை கணக்கீடு செய்ததில், ஹெல்மெட் அணியாதவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதை தடுக்க புதிய முயற்சியை மேற்கொண்டோம்.  முதலில், வருங்கால வாகன ஓட்டிகளான குழந்தைகளுக்கு  போக்குவரத்து விதி முறைகளை கற்றுத்தர முடிவு செய்தோம். அதன்படி, வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத் தருகிறோம். இது வரை 6 பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. 

போஸ்ட் கார்டு 
நாங்கள் எடுக்கும் வகுப்பில் மாணவர்களிடம் 'உங்கள் நண்பர் அல்லது பெற்றோரை ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியும் படி கூறுங்கள், அவ்வாறு உங்கள் பேச்சை கேட்டு அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்தால் அதை எங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துங்கள்'  என்று கூறி, எங்கள் அலுவலக முகவரி அச்சிடப்பட்ட போஸ்ட் கார்டுகளை  பள்ளி மாணவர்களிடம் கொடுத்தோம்.  400 போஸ்ட் கார்டுகள் கொடுக்கப்பட்டதில் 150 கார்டுகளை மாணவர்கள் எங்களுக்கு கடிதமாக எழுதி அனுப்பியுள்ளனர். அதில் பெற்றோர் தங்களது பேச்சை கேட்பதாகவும் , தற்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. கடிதம் எழுதிய மாணவர்களுக்கு காவல் துறை சார்பில் ஒரு சிறிய பரிசு அளித்து வருகிறோம். 100 சதவிகித பாதுகாப்பான பயணமே எங்கள் நோக்கம். அதை விரைவில் சாத்தியப்படுத்துவோம். 
இவ்வாறு அவர் கூறினார்.  





Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...