மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம், உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screeming test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. 

வயது மற்றும் கல்வி தகுதி: 
இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். 

பயிற்சி விபரங்கள்: 
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.12.2016 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை: 
பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களை http://mkuniversity.org/direct/index.html என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். 

இத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில் “Application for Admission to Coaching for Civil Services Aptitude Test-2017” பயிற்சிவகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு பயிலக இயக்குநர், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை&625021 என்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும். 31.10.2016 பயிற்சி பெற கடைசி நாளாகும்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...