நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி செங்கை இன்ஜி. மாணவர் 3 பேர், சென்னை ஐடி ஊழியர் 4 பேர் பலி

முக்கூடல்:  நெல்லை மாவட்டம் ஆலங்குளம்-அம்பை ரோட்டை சேர்ந்த பிரபாகரன் மகன் ஹரக் கிருபாகரன் (21) இவர் செங்கல்பட்டு தனியார் பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார். ஆயுதபூஜை விடுமுறைக்காக தன்னுடன் படிக்கும் செங்கல்பட்டை சேர்ந்த உஸ்மான் மகன் தமீம் அன்சாரி (21), குமாரவேல் மகன் சோபன்பாபு (21) ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று ஊருக்கு வந்தார். பின்னர் நண்பர்கள் 3 பேரும் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று காலை சென்றனர். நண்பர்கள் 3 பேரும் முக்கூடல் முத்துமாலையம்மன் கோயில் பின்புறம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சுழலில் சிக்கி 3 பேரும் இறந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி தேடினர். 3 பேரையும் சடலமாக மீட்டனர்.

மற்றொரு சம்பவம்:

புதுச்சேரியைச்சேர்ந்தவர்கள் சதீஷ்குமார்(25), வசந்தராஜ்(24) நக்கீரன்(28) மற்றும் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன்(26). இன்ஜினியர்களான இவர்கள் 4 பேரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர். ஆயுதபூஜை விடுமுறையை அடுத்து நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தலையணை தாமிரபரணி ஆற்றில் குளிக்க முடிவு செய்து கடந்த 8ம்தேதி அவர்கள் விகேபுரம் வந்தனர். இதைத்தொடர்ந்து பாபநாசத்தில் உள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் அறை எடுத்து தங்கினார்கள்.

9ம்தேதி காலையில் 4 பேரும் அறையை பூட்டி விட்டு குளிக்க தலையணை சென்றார்கள். அன்றிரவு அவர்கள் வெகுநேரம் ஆகியும் அறைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மண்டப நிர்வாகி விகேபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலை தலையணையில் ஒருவரது உடல் மிதப்பது தெரியவந்தது. மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாத நிலையில் இறந்தவர் யார் என்று அடையாளம் காண்பதற்காக போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்திருந்த பையை சோதனை போட்டனர். அதில் இருந்த விலாசத்தில் தொடர்பு கொண்டதில் அது நக்கீரன் தந்தை குமரகுருபரன் என தெரியவந்தது.

இறந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவரும் மனைவி லதாவும் பாபநாசம் விரைந்து வந்தார்கள். இன்று காலை ஆற்றில் இறந்து கிடந்தவர் தங்கள் பிள்ளைதானா என போலீசார் அடையாளம் காட்டச்சொன்னார்கள். அவர்கள் உடலைபார்த்து விட்டு அது தங்கள் பிள்ளை அல்ல என தெரிவித்தனர். இதற்கிடையில் தலையணையில் மேலும் 3 பேர் உடல் இன்று காலை மிதப்பது தெரியவந்தது. அதில் ஒருவரது உடலை குமரகுருபரன் தனது மகன் நக்கீரன் என அடையாளம் காட்டினார். இதைத்தொடர்ந்து இறந்த 4 பேர் உடல் அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றவர்களின் பெற்றோர், உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...