கோவையில் நடைபெற்ற வன்முறையில் மக்கள் பீதியில் உள்ளனர் - கள ஆய்வில் தகவல்

கோவையில் நடைபெற்ற வன்முறையின்  காரணமாக மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளதாக, கள ஆய்வில் ஈடுபட்டுள்ள மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக அமைக்கப்பட்ட உண்மையை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

கோவையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசி குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வளத்தில் கோவையில் பல்வேறு வன்முறை வெடித்தது. இதில் வனிக வளாகங்கள், நிறுவனங்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அடித்து நொருக்கப்பட்டன. துடியலூர் பகுதில்  காவல்துறை வாகனம் மற்றும் இரு கடைகளும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கலவரம் இயல்பாக தோன்றியதா அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்ற உண்மையை கண்டறிய மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 18 பேர் கொண்ட குழு கோவையில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவில் காந்திகிராம் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் மார்கண்டன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொது செயலாளர் சமுவேல் ராஜா, வழக்கறிஞர்கள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கலவரத்திற்கான காரணம் மற்றும் அதனை காவல்துறை தடுக்க தவறியது குறித்தும், மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அப்பகுதி மக்களை சந்தித்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பேசிய மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில பொது செயலாளரும் உண்மை கண்டறியும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முரளி, வன்முறை சம்பவம் காரணமாக மக்கள் மனதில் தற்போது அச்சம் உள்ளதாகவும், இதில் இருந்து மக்களை மீட்டெடுக்க மக்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

பெரும்பாலான இளைஞர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாகவே தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க உள்ளதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். சசி குமார் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற பந்த் குறித்தும் மக்கள் சிவில் உரிமை கலகத்தினர் நேற்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...