50ஆண்டு கால திராவிட ஆட்சியில் தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை இல்லை - ராமதாஸ் அறிக்கை!


தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை அமைக்காதது திராவிட ஆட்சியின் தோல்வி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதலமைச்சராக இருப்பவரும், இருந்தவர்களும் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெறக் கூடாதா? என்ற விவாதம் பொது அரங்கில் எழுந்திருக்கிறது. பொதுநலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வினாவை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு கால கட்டத்தில் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் அறிஞர் அண்ணா தவிர வேறு எவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை; தனியார் மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பெற்றுள்ளனர் என்பதை வைத்துப் பார்க்கும் போது, முதலமைச்சர்களாக இருப்பவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் தரமானவையாக இல்லை என்ற முடிவுக்குத் தான், யூகத்தின் அடிப்படையில், வரவேண்டியிருக்கிறது. ஒருவேளை இதுதான் உண்மை நிலை என்றால், அது மிக கவலைக்குரியதாகும்.

தில்லியில் உலகப் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏராளமாக இருந்தாலும், பிரதமருக்கோ,  மத்திய அமைச்சர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படுவர். 1984ஆம் ஆண்டில் பாதுகாவலர்களால் சுடப்பட்ட பிரதமர் இந்திரா காந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அண்மைக்கால உதாரணத்தை கூற வேண்டும் என்றால், கடந்த 2009ஆம் ஆண்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுக் கொள்வதற்கு காரணம்  தனியார் மருத்துவமனைகளை விட அதிக வசதிகளை கொண்டிருப்பது தான். ஆனால், அத்தகையதொரு உலகத்தரம் கொண்ட மருத்துவமனை தமிழகத்தில்  இன்று வரை உருவாக்கப்படவில்லை. இது 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளின் தோல்வியாகும்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...