வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் வாலாங்குளம் தூர்வார நடவடிக்கை

கோவையை சார்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு (ஈசிஜி) என்ற தன்னார்வ அமைப்புகள்  வாலாங்குளம் ஏரி மற்றும் பெரியகுளம் ஏரியை பராமரிக்கும் வகையில் தத்தெடுத்துள்ளனர். வாலாங்குளம் ஏரி தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக வாட்ஸ் ஆப் குழு நம்ம கோவை மூலமாக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் விஜயகார்த்திகேயன் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த தகவல் மூலமாக  மாநகராட்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக  கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் முகமது சலீம் பேசுகையில்: திருச்சி சாலையில் அருகே உள்ள சிஎஸ்ஐ சர்ச் வாலாங்குளத்தில் குப்பைகொட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த தேவாலயத்தில் இது தொடர்பாக பல்வேறு முறை கூறப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தமால் தேவாலயத்தில் உள்ள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்த தேவாலயத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாக்களிலும் மீதமாகும் எஞ்சிய உணவுகள், இலைகள், குப்பைகள் ஆகியவற்றை இந்த குளத்தில் கொட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேவாலயம் 73வது வார்டு பகுதிக்குட்பட்டது. இப்பகுதியில் மாநகராட்சி குப்பைக் கழிவுகளை வெளியேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்த தேவாலயத்தில் இருந்து குளத்திற்கு ஒரு வழி அமைத்து இங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி வழிவகுக்க வேண்டும்.

இந்தமாதம் அக்டோபர் 20 அல்லது 22ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. அதற்குள் இக்குளத்தை தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் கூறினார்.

இந்த புதிய முயற்சியில், கோவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவிற்கு கையுறைகள் மற்றும் முகமூடிகள் போன்ற பொருட்கள் வழங்கிட பல்வேறு அமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  உதவ முன்வந்துள்ளனர். 

இந்த வாலாங்குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் மற்றும் உதவும் கரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு நிறுவனர் முகமது சலீம்-9787878910 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...