ஆளுநரின் நடவடிக்கைக்கு ஸ்டாலின் வரவேற்பு: மாநில நலனுக்கான மாற்று ஏற்பாடு என கருத்து


சென்னை: முதலமைச்சரின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நலம்பெற்று திரும்பும்வரை தமிழகத்தின் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் அமைச்சரவையைக் கூட்டி முக்கிய முடிவெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் வரவேற்றுள்ளார். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக நலனை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...