கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக திமுக அரசை விமர்சித்து பேசினார்.


பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்த, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக முன்னாள் மாநிலத்தலைசர்அண்ணாமலை, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் அலையை உருவாக்கி வருவதாக கூறினார்.



அவர் தொடர்ந்து பேசியபோது, “தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக நிரந்தர டிஜிபி நியமிக்காமல் பொறுப்பு டிஜிபி மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது. பொறுப்பு டிஜிபி கூறும் உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்காத நிலை உருவாகியுள்ளது. மேலும், அந்த பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றாலும் கூட, அதற்குப் பதிலாக மீண்டும் பொறுப்பு டிஜிபியையே நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது திமுக அரசின் நிர்வாக குறைபாட்டை வெளிப்படுத்துகிறது,” என்று குற்றம்சாட்டினார்.



மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியைச் சரியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதவி மற்றும் நாற்காலி மட்டுமே முக்கியம். ஆட்சி நடத்த இயலாத நிலையில் இருந்தால், பொறுப்பு முதலமைச்சரை நியமித்திருக்கலாம்,” எனவும் அவர் விமர்சித்தார்.

அண்ணாமலை தனது உரையில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்தும் கேள்வி எழுப்பினார். “பொறுப்பு டிஜிபி நியமனத்தின் விளைவாக மாநிலத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2080 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 8008 கொலை வழக்குகள், 39,900 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.



அதே நேரத்தில், பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாகவும் அவர் குற்றம்சாட்டினார். “கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தங்களது கட்சிப் பெயரையே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தக் கட்சி திமுகவின் கொத்தடிமை கட்சியாக செயல்படுகிறது. அவர்களின் கட்சிக் கொடி, அடையாளங்கள் மட்டுமல்லாமல், பொதுச் செயலாளர் ஈஸ்வரனின் புகைப்படத்தைக் கூட பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது,” என்று கூறினார்.

முடிவில், “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான கட்சியும் ஆட்சியும் திமுக தான்,” என்று கடுமையாக விமர்சித்து தனது உரையை அண்ணாமலை நிறைவு செய்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...