கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர் கைது

ஆலந்தூர்: கள்ள நோட்டு மாற்ற முயன்ற வடமாநில வாலிபருக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (55), தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை முக்தம்ஜி தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடம் காய்கறி வாங்கிவிட்டு, ரூ.1000 நோட்டை கொடுத்துள்ளார். 

லட்சுமி அம்மாளிடம் சில்லரை இல்லாததால், அருகில் உள்ள கடைக்கு சென்று, அந்த ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டார். அதை பரிசோதித்த கடைக்காரர் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை உறுதி செய்தார். இதுபற்றி அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அங்கிருந்து தப்பி ஓடினார்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முருகதாஸ், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, பரங்கிமலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், கொல்கத்தாவை சேர்ந்த தரிபுல்லா (35) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். 

இவர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வரும் அப்துல் வகாப் (30) என்பவரோடு தங்கி இருப்பதாக கூறினார். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரிந்தது. இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அப்துல் வகாப்பை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...