பேரிடர் காலங்களில் பாதுகாப்பு பணி தயார் நிலையில் இருக்க வேண்டும் - ஜெனரல் மார்வோ

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் முன்னிலையில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினல் ஜெனரல் மார்வோ தலைமையில் நடைபெற்றது. 




இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினல் ஜெனரல் மார்வோ பேசுகையில்:-
பேரிடர் காலங்களில் மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணிப்பில் ஈடுபட்டும், குறிப்பாக மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்குவதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், நீர் ஓடைப்பகுதிகள், குளங்கள் ஆகியவற்றில் நீர்நிலை தன்மை குறித்து கண்காணித்தும், அதுமட்டுமின்றி தாழ்வான பகுதிகளில் திடீர் என தண்ணீர் தேங்கும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் படகுகள் போன்ற பாதுகாப்பான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும், தீ விபத்து, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகிய காலங்களில் தங்களை தாங்களே பாதுகாப்பதன் மட்டுமின்றி தம்மை சார்ந்துள்ள வரையும் பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாலுக்கா அளவில் அனைத்துத்துறை அலுவலர்களை கொண்டு பேரிடர் ஆய்வுக்குழு அமைத்து கண்காணிக்கவும்.

மேலும், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம்  சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு தயார் நிலையில் வைத்துக்கொள்வதுடன் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கவும்,  காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவை ஒன்றினைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதன் மட்டுமின்றி அனைத்துத்துறை அலுவலர்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, வருவாய் கோட்டாட்சியர்கள் சின்னச்சாமி, சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...