கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வேண்டுமென்றே குற்றவாளியின் கைது நடவடிக்கையை காவல்துறை தாமதப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மேலும், தமிழகத்தில் இந்து நிர்வாகிகள் கொலை செய்யப்படுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் கண்காணிக்கபட வேண்டும் என்றும், புதிதாக பொருப்பேற்றுள்ள ஒ.பன்னீர் செல்வம் சுணக்கம் இன்றி செயல்பட  வேண்டும் எனவும், தமிழகத்தில் சட்டம் ஒழங்கு எவ்வாறு உள்ளது என கண்காணிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அவதூறு பரப்புவது தவறானது என்றும், உண்மையிலேயே தவறாக பேசினார்களா என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து கைது செய்ய வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு லாரி ஓட்டியதால் மூன்று கல்லூரி மாணவிகள் இறந்த சம்பவத்தை அடுத்தாவது தமிழகத்தில் உடனடியாக டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவதோடு, குடித்து விட்டு வாகன ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். உள்ளாட்சி தேர்தல் நெறுங்கி வரும் வேலையில் பகையுணர்வோடு கூலிப்படை ஏவி கொலை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...