தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் கலந்து கொண்டு 24 பேருக்கு விருதுகள் மற்றும் 1229 பேருக்கு பட்டங்களையும் வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி பேசுகையில்:
தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் பலமே மாணவர்களும், ஆராய்சியாளர்களும் தான். மாணவர்கள் ஆராய்ச்சிகளுக்கு ஆர்வம் கட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.பல்கலைக்கழகத்தின் தரவரிசையில் அடிப்படையில் மத்திய மனிதவளத்துறை மேம்பாடு மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆராய்ச்சி அமைப்பின் நாடு முழுவதும் நடந்த தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு பல்கலைக்கழகம் தேசிய அளவில் 40வது இடமும், மாநில அளவில் 4வது இடமும் பிடித்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் 250 நிறுவனங்கள் மத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 131-140 தரவரிசையில் உள்ளது. இளநிலை-பிரிக்ஸ் 2016 தரவரிசை  44 இந்திய நிறுவனங்களில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 22 தரவரிசையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஏழு நிறுவனங்களில் தமிழ்நாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 3 வது நிலையில் தற்போது உள்ளதாக இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு: தமிழக முதல்வர் ஜெயலலிதா வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கடந்த 5ஆண்டுகளில் மட்டும் வேளாண் துறைக்கு1429 கோடி ரூபாய் ஒதுக்கி சாதனை படைத்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் தமிழக வேளாண்மையில் இரண்டாவது பசுமை புரட்சியை ஏற்படுத்தியதுடன் சிறப்பான திட்டங்களை திட்டங்களை தீட்டி கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை க்ருஷி கர்மான் என்ற விருதை பெற்று தேசிய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் கூறினார்.

அதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் வேளாண் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் 1229பேருக்கு நேரடியாகவும் சுமார் 640 பேருக்கு தபால் மூலமும் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  நஞ்சா அஜ்ஜன் விருது, பொன்விழா 1966ம் ஆண்டு இளமறிவியலுக்கான உலக மண்ணியல் ஆண்டு 2015 நினைவு விருது உட்பட 8 விருதுகளை சுமார் 51 பேருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இதேபோல் மும்பை நபார்ட் நிறுவன தலைவர் ஹர்ஷ்குமார் பன்வாலா மற்றும் கனடா நாட்டின் மனிடோபாஅ பல்கலைக்கழக சர்வதேச ஆராய்ச்சி துறை துணை தலைவர் முனைவர் திக்விர் ஜெயாஸ் ஆகியோருக்கு கௌரவ முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் மற்றும் குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் மகேசன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவர்கள்  பலர் பங்கேற்றிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...