அனைத்து தீவிரவாத குழுக்களையும் பாகிஸ்தான் தடை செய்ய வேண்டும்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து தீவிரவாத குழுக்களையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. காஷ்மீர் வன்முறை குறித்து உலக நாடுகள் மத்தியில் பேச சென்ற பாகிஸ்தான் அரசின் பிரதிநிதிகளுக்கு, செப்டம்பர் 18ல் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.  நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டை உலக நாடுகள் ஏற்க மறுத்து விட்டன. குறிப்பாக அமெரிக்கா இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மீது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது. தற்போது மீண்டும் அதே கருத்தை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனடர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாத குழுக்களை அங்கீகரிக்காமல் தடை செய்ய வேண்டும். அதன் பின் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நிறுத்த வேண்டும். தீவிரவாத தாக்குதலால், பிரிவினைவாதிகளின் வன்முறையால் பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட தீவிரவாத குழுக்களிடம் இருந்து பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்கா உதவ தயாராக உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக தீவிரவாதிகள் என்று கண்டறியப்பட்ட குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பாதுகாப்பான இடமாக கருத இடம் கொடுக்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம்தான் தற்போது எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க முடியும். தங்கள் மத்தியில் உள்ள பிரச்னைகளை சமரச முயற்சி மூலம் தான் தீர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...