தீபாவளியை முன்னிட்டு கோவையில் கூடுதல் அரசு பேருந்துகள் அறிமுகம்.


தீபாவளியை முன்னிட்டு கோவையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் 

கழகத்தின் கோவை மாவட்ட பொது மேலாளர் கோவிந்தராஜன் நம்மிடம் கூறியதாவது:- 

''தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கோவை கோட்டத்திற்கு மட்டும் 350 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளன. இந்த சிறப்பு பேருந்துகள் வரும் அக். 26ம் தேதி முதல் தீபாவளி நாள் வரை இயங்கும். அதனைத் தொடர்ந்து, அக். 30 முதல் நவ. 2ம் தேதி வரை இயங்கும்.

இப்பேருந்துகள் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து உதகை, சேலம், மதுரை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளன.

பொதுவாக அரசுப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறாது. அவ்வாறு ஏதேனும் கட்டணக் கொள்ளை குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறப்பு பேருந்துகளைத் தவிர்த்து மேலும் கூடுதல் பேருந்துகள் தேவை என்னும் பட்சத்தில் அதற்கும் பேருந்துகள் தயாராக உள்ளது'' என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...